பக்கங்கள்

வெள்ளி, 4 மே, 2007

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார்?

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார் என்ற கேள்வி இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழுவதுதான்; காரணம் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் சன் டிவி என்ற பூதம் மூலம் திமுக தற்போது செய்துவரும் அரசியல் கண்டிக்கப்படவேண்டியது. ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவின் தலைமையை ஏற்பவர் யார் என்று சன் தொலைக்காட்சி உலகப்புகழ்பெற்ற?! ஏ.சி. நீல்சன் நிறுவனம் மூலம் ஒரு கருத்துக்கணிப்பை (திணிப்பை) நடத்தி முடிவை வெளியிடப்போகிறதாம். இந்தக் கேள்விக்கான அவசியம் என்ன இப்போது?; சன் டிவி என்ற ஊடக மிருகத்தைக் கொண்டு திமுக வேண்டுமென்றே குட்டயைக் குழப்பிக் குளிர்காய நினைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சன் தொலைக்காட்சி ஒரு தனி நிறுவனம் அதற்கும் திமுகவிற்கும் தொடர்பு கிடையாது என யாரும் வாதிட வந்துவிட வேண்டாம். சன் தொலைக்காட்சியால் திமுகவிற்கும், திமுக வினால் சன் தொலைக்காட்சிக்கும் கண்டிப்பாக ஆதாயம் இருக்கிறது. சன் தொலைக்காட்சியின் வளர்ச்சி பின்னொரு காலத்தில் நம் ஜனநாயகத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக விளங்குவதற்குவதற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது. ஏனெனில் நாம் (பெரும்பாலும் அறம் குறைந்த) ஊடகங்களால் கட்டமைக்கப்படும் அவல உலகில் வாழுகிறோம்; அரசியலும் மதமும் போல் அரசியலுடன் இணைந்த ஊடகம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்விசயத்தில் (தற்போதைக்கு) ஜெயா தொலைகாட்சி குறித்துப் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் சன் தொலைக்காட்சியை விடவும் மோசமான கருத்துத் திணிப்புகளைச் செய்தாலும், அவர்களின் வீச்சு ஒரு சிறு கும்பலைத்தாண்டி வெளியே செல்லப்போவதில்லை என்பதால்.

சன் தொலைக்காட்சியோ அல்லது அதனால், தேவையில்லாமல், தலையில் வைத்துக் கொண்டாடப்படும் ஏசி நீல்சன் அமைப்போ, (ஏ.சி. நீல்சன் நிறுவனம், உலகப்புகழ்பெற்றது என்பதே சன் தொலைக்காட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு புனைவு!) ஒருபோதும் தன் கருத்துக் கணிப்புகள் குறித்த நெறிமுறைகளை (Methodology) வெளிப்படையாகச் சொன்னதில்லை. பொதுவாகப் பெரும்பாலான ஊடகங்களும் பூடகமாகவே இக்கருத்துக் கணிப்புகளைச்/திரிப்புகளைச் செய்தாலும், சன் தொலைக்காட்சியின் வீச்சு காரணமாக அதன் பாதிப்பு அதிகம் இருக்கும். இவ்வாறு வளார்ந்துவரும், முன்பு நினைத்துப் பார்த்திராத, பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு அரசு விரைவில் சட்டமியற்ற வேண்டும். இவ்வாறு ஒரு நிறுவனம் மட்டுமே, குறிப்பாக அரசியல் பிண்ணனி கொண்ட, அச்சு, மின்னணு ஊடகத் துறைகளில் ஏகபோக உரிமை கொண்டாட அனுமதிக்காதபடி அச்சட்டம் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்காக கலாநிதி மாறனின் திறமையை நான் குறைசொல்லவில்லை. ஆயினும் அரசாங்கத்திடம் எப்போதும் ஒரு கடிவாளம் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

குழலியின் பின்னூட்டத்திற்குப் பிறகான குறிப்பு: இது சற்றுக் கடினம்தான்; மத்திய மாநில உள்ளாட்சி என்ற மூன்றடுக்குகளிலும் அதிகாரம் செலுத்தும் கட்சியின் ஆதிக்கம் இச்சட்டமியற்றுவதில் சில தடங்கல்களை ஏற்படுத்தலாம். ஆனால் முயன்றால் முடியாததில்லை. இதுகுறித்து அரசியல்வாதிகளிடமோ, சட்ட அறிஞர்களிடமோ ஏதேனும் கருத்துக்கள் இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்பதுதான் கவலையளிக்கக்கூடிய விடயம்.

பின்னிணைப்பு: தினகரன் நாளிதழை சன் தொ.கா வாங்கியபோது திமுக + சன் தொ.கா வின் ஊடக ஆதிக்கம் குறித்து காலச்சுவடு எழுதிய தலையங்கம். அதை ஆதரித்து எம். கே. குமாரும், மறுத்து ராம்கியும் 2005 ல் தங்களது வலைப்பதிவில் எழுதியவற்றை மேற்கண்ட இணைப்பில் சொடுக்கிப் பார்க்கவும். எம்.கே. குமாரின் பின்னூட்டத்தில் நடந்துள்ள விவாதம் கவனிக்கப்பட வேண்டியது. இவ்விசயத்தில் எம். கே. குமாரின் கருத்துக்கள் என் கருத்துக்களுடன் அப்படியே பொருந்திப்போகிறது.

32 கருத்துகள்:

  1. //ஆயினும் அரசாங்கத்திடம் எப்போதும் ஒரு கடிவாளம் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. //

    I do Agree.

    பதிலளிநீக்கு
  2. //(ஏ.சி. நீல்சன் நிறுவனம், உலகப்புகழ்பெற்றது என்பதே சன் தொலைக்காட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு புனைவு!)//
    இது மிகச்சரி. இது சன் டிவி நிறுவனத்தின் ஒரு பினாமியாக கூட இருக்கலாம். யார் கண்டா :))

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4 மே, 2007 அன்று AM 2:56

    சோனியாஜிக்கு கூஜா தூக்கும் ஒருவர்

    பதிலளிநீக்கு
  4. //குறிப்பாக அரசியல் பிண்ணனி கொண்ட, அச்சு, மின்னணு ஊடகத் துறையில் ஏகபோக உரிமை கொண்டாட அனுமதிக்காதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.
    //
    மத்திய மாநில உள்ளாட்ச்சி என்ற மூன்றடுக்குகளிலும் அதே கட்சி ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
  5. தங்கவேல்,
    நல்ல பதிவு. நடுநிலைமையாக அலசி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஏ.சி.நெல்சன் உலக தரம் வாய்ந்த நிறுவனம்தான் தங்கவேல். ஆனால் அரசியல்செல்வாக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் பணியாத நிறுவனம் என்பதே கிடையாது. நெல்சன் விவகாரத்தில் அப்படி நடந்ததா என்று தெரியவில்லை.

    ஊடகத்துறையில் சன், ஜெயா மாதிரி நிறுவனங்கள் ஓரளவுக்கு மேல் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதவாறு MRTP சட்டங்கள் உள்ளன. ஆனால் அது பயன்படுத்தப்படுமா என்பது தான் கேள்விக்குறி

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா4 மே, 2007 அன்று AM 10:46

    தங்கவேலய்யா, நடுநிலைமையில் எழுதியுள்ளீர்களய்யா....பூத்தையா என்ன குதி குதிப்பாருன்னு பார்க்கலாமய்யா...

    பதிலளிநீக்கு
  8. //(ஏ.சி. நீல்சன் நிறுவனம், உலகப்புகழ்பெற்றது என்பதே சன் தொலைக்காட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு புனைவு!)//

    இது முற்றிலும் தவறான கருத்து. சன் டிவி தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஏ.சி. நீல்சன் நிறுவனம் கருத்துக் கணிப்புகளால் புகழ்பெற்றது. ஆரம்பக்கால புகழ்பெற்ற இந்தியா டுடே கருத்துக் கணிப்புகளை நடத்திய நிறுவனம் ஏ.சி. நீல்சன்!

    மற்றபடி இப்பதிவைப் பற்றி சொல்லவேண்டுமானால் தினகரனின் அந்த குறிப்பிட்ட சர்வேயில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. கலைஞருக்கு பிறகு யார் என்று பல ஊடகங்களை கேள்விகளை எழுப்பி கட்டுரைகள் வரைவதை யாரும் ஆட்சேபித்ததாக தெரியவில்லை. ஜெ.வை பற்றி மட்டும் விமர்சனங்களோ, சர்வேயோ எடுக்கக் கூடாது என்பது வடிகட்டிய ஏகாதிபத்திய அணுகுமுறையாகவே படுகிறது. ஜெ. என்ன அந்த அளவுக்கு ஸ்பெஷலா?

    நடுநிலை நாளேடு என்று தன்னை கூறிக்கொள்ளும் தினமலரின் ஒரு இதழையும், கட்சி சார்பு ஏடாக அறியப்படும் தினகரனின் ஒரு இதழையும் ஒன்றாக வைத்து ஒப்பிட்டுப் பார்த்தீர்களேயானால் ஓரளவுக்கு உங்களுக்கு நிலவரம் புரியலாம் :)

    பதிலளிநீக்கு
  9. நல்ல நடுநிலைமையான அலசல். கருத்துக் கணிப்புகளின் நம்பகத் தன்மையும், அதை நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் நிறுவனத்தின் நம்பகத் தன்மையும் மிகவும் கேள்விக்குறியதே. அதுவும் ஏசி நீல்சன் கடந்த சில ஆண்டுகளாக திமுகவிற்கு சாதகமான முடிவுகளை மட்டுமே வெளியிட்டு வந்துள்ளது. அவை பொய்த்த போது சம்பிரதாயமான 'disclaimer' கூட போடுவதில்லை. இது மிக சிறிய பிரச்சினை.
    நம் சமுகத்தின் அடுத்த தலைமுறையின் மீது சன் டீவியின் ஆதிக்கம் மிகவும் பெரியதாக இருக்கும். அதன் கட்சிப் பிண்ணனி இன்றைய மத்திய வயதினருக்கு நன்கு தெரியும். அடுத்த தலைமுறைகளுக்கு இதன் சீரியஸ்நெஸ் புரிவது மிகவும் கடினம். அதன் காரணம் 'monopoly' எனப் படும் சர்வாதிகாரப் போக்கு. அமெரிக்காவில் வால்மார்ட் தன்னிடம் பொருட்கள் சப்ளை செய்யும் கம்பெனிகளிடம் மிகச் சிறந்த கொள்முதல் விலைகளை negotiate செய்ய முடியும் - காரணம் அதனுடைய பிரம்மாண்டம். இங்கும் அதே தான் நடக்கிறது - அரசியல் பிண்ணனி இன்றி இந்தியாவில் இவ்வாறு செய்வது முடியாது. ஆகவே சன் டீவீ நடுநிலையாக மாறினால் மட்டுமே அடுத்த சமுதாயம் சரியான செய்திகளை அறிய முடியும். சன் டீவீயின் வீச்சு மிகவும் அதிகம் - கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மீடியாவின் பலம் நிரூபிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அனைத்து கணிப்புகளும் அதிமுகவின் வெற்றியை பறை சாற்றின. இலவச அறிவிப்புகளும், அதை மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமையும் சன் டீவீயை மட்டுமே சாரும். (அடுத்த இடம் நிதியமைச்சருக்கு). இந்த இலவசம் சாத்தியம் என்ற செய்தி திரும்பத் திரும்ப மக்களின் மனதில் உறு ஏற்றப் பட்டு, தேர்தல் நெருங்குகையில் திமுக அணி முன்னேறமடைந்ததை நாம் கண்டோம். (இந்த முட்டாள்தனமான திட்டங்களால் விளைந்துள்ள பயன்கள், நாம் அடைந்துள்ள நட்டங்களை விவாதிக்க இது களமல்ல). துக்ளக் நடத்திய கருத்துக் கணிப்புகளும் (இரண்டு) இந்த மாற்றத்தினை எடுத்துக் காட்டின.
    ஆகவே நாட்டின் பிற்கால நன்மைக்கு மீடியாக்களின் மீது நீதிமன்றத்தின் கடிவாளம் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வசம் இந்தக் கடிவாளமிருந்தால் அவை துஷ்பிரயோகம் செய்யப் படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  10. அமெரிக்காவில் கருத்துக்கணிப்புகளை வணிக நிறுவனங்களே பெரும்பாலும் பயன்படுத்துகிறது. கேள்விகளை வடிவமைப்பதில் உதவுவதில் ஆரம்பித்து வாடிக்கையாளர்களின் சிந்தனையை ஊடுருவது வரை marketing research என்று வகைப்படுத்துகிறார்கள்.

    காட்டாக மைக்ரோசாஃப்ட் 'லீனக்ஸ் இன்னும் வர்த்தக நிறுவனங்களின் முக்கியமான நிரலிகளில் செயல்படவில்லை' என்று ஒரு கணிப்பும், ரெட் ஹாட் 'லீனக்ஸ் வட அமெரிக்காவெங்கும் பரவலாக நீக்கமற நிறைந்திருக்கிறது' என்று ஒரு கணிப்பும் வெளியிடுவார்கள். சில சமயம், ஒரே நிறுவனமே இரண்டையும் நடத்தியிருக்கும். என்ன கேள்வி கேட்டிருக்கிறார்கள், எவரை வினவியிருக்கிறார்கள் என்பதில் சூட்சுமம் இருக்கும்.

    பணிபுரிபவர்களுக்கு இந்தக் கணிப்பு அத்தியாவசியமானது. தங்கள் முடிவுகளை மேலதிகாரிக்குக் கொண்டு செல்லவும், நுட்பங்கள் தோல்வியடையும் சமயத்தில் விசாரிப்பு நடக்கும்போது 'ஏசி நீல்சன் சொன்னார்கள்!' என்று தற்காத்துக் கொள்ளவும் உபயோகமாகும்.

    தினகரன் அல்லது தேர்தல் சமய ஆருடங்களை மக்கள் பொழுதுபோக்காகவே எடுத்துக் கொள்கின்றனர்.

    உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு சிடி.
    தமிழகத்தில் சன்/ஜெயா செய்திகள்?

    பதிலளிநீக்கு
  11. India today munnadi use pannathu MARG Marketing and Research Group. I don't know they changed their name. I did worked in this company as part time and went coimbatore for exit poll. When rajiv gandhi was priminister. And MARG Predicted 183 seats. I did lot of surveys. in that we will ask only main question to the public rest we will fill. Because of time constraints and other factors some we did asked and forget to mark on the sheet.

    பதிலளிநீக்கு
  12. //(ஏ.சி. நீல்சன் நிறுவனம், உலகப்புகழ்பெற்றது என்பதே சன் தொலைக்காட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு புனைவு!)//

    இந்த நிறுவனத்தின் நிரலியில் வேலை செய்துள்ளதால் தெரியும். அமெரிக்காவில்
    எந்த சாக்லேட் எந்த மாநிலத்தில் எந்த கடையில் அதிகமாக விற்றது
    என்று இவர்களை கேட்டால் கரெக்ட்டாக சொல்வார்கள்.
    இது உலகப் புகழ் பெற்ற நிறுவனம்தான். கருத்துகணிப்பு உண்மையாக தான் செய்வார்கள்.

    இதை இப்பொழுது
    செய்ய வேண்டிய அவசியம் என்ன? லொள்ளுதான்.


    //இது சன் டிவி நிறுவனத்தின் ஒரு பினாமியாக கூட இருக்கலாம். யார் கண்டா :))
    //

    indha joke super.

    பதிலளிநீக்கு
  13. ---எந்த சாக்லேட் எந்த மாநிலத்தில் எந்த கடையில் அதிகமாக விற்றது
    என்று இவர்களை கேட்டால் கரெக்ட்டாக ---

    Absolutely... Because this is quantitative and depends on the production/operations software synchronization with the partners.

    But the current survey is 'qualitative'. There are no simple 'three choice' paths.

    பதிலளிநீக்கு
  14. சிவபாலன், சந்தோஷ், முதலாம் அனானி, வெற்றி, மற்றும் இரண்டாம் அனானி தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    குழலி உங்களது பின்னூட்டத்திற்கான பதிலை என் இடுகையின் கடைசி பத்தியில் இணைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  15. செல்வன், லக்கி, ஆதிரை நீங்கள் மூவரும் ஏ.சி. நீல்சன் நிறுவனம் ஏற்கனவே புகழ்பெற்ற நிறுவனம்தான் எனக் கூறியுள்ளீர்கள். லக்கி ஏற்கனவே இந்தியா டுடே இதழுக்கு இந்நிறுவனம் கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளது எனக் கூறியுள்ளார். நானும் இணையத்தில் தேடி அக்கம்பெனி உண்மையில் புகழ்பெற்றதுதான் எனத் தெரிந்துகொண்டேன். அவசரப்பட்டு ‘’ (ஏ.சி. நீல்சன் நிறுவனம் உலகப்புகழ்பெற்றது என்பதே சன் தொலைக்காட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு புனைவு!)” என எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.

    ஆயினும்,எனது விமரிசனம் ஏ.சி. நீல்சன் நிறுவனம் உலகப்புகழ்பெற்றதா இல்லையா என்பது குறித்து அல்ல. மாறாக எந்த அடிப்படையில் அவர்கள் கருத்துக்கணிப்பு நடத்துகிறார்கள்?, கணிப்பில் பங்பெற்றவர்களின் எண்ணிக்கை (sample size)? அவர்களின் கணிப்பில் பங்குபெறும் பொதுமக்களின் பிற இயல்புகள் (characteristics) என்ன? என்பது குறித்து எந்தத் தகவலும் வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. (இது குறித்த மேலதிகத் தகவல்களை ஒரு தனியிடுகையாக இடவிருக்கிறேன்.)

    மேலும் ஜெயலலிதா குறித்த கருத்துக்கணிப்பிற்கான தற்போதைய கேள்வியின் அவசியம் என்ன? ஜெயா குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்க வேறு எத்தனையோ கேள்விகளிருக்க அவைகளைக் கேட்காமல், அவருக்குப் பின் யார் என்று - அதற்கான ஒரு சூழ்நிலை இல்லாதபோதே, அதுவும் ஒரு திமுக சார்பு ஊடகம், கேட்பதில் உள்ள உள்நோக்கத்தைத்தான் சாடியிருந்தேன். இங்கு எனது விமரிசனம் தரத்தையும், நோக்கத்தையும் சார்ந்துதானே தவிர அந்நிறுவனம் உலகப் புகழ்பெற்றதா என்பது சார்ந்தல்ல. சன் தொலைக்காட்சி, ஏ.சி நீல்சன் நிறுவனம் உலகப் புகழ்பெற்றது எனக்கூறி தனது கருத்துத் திணிப்பிற்கு ஒரு நம்பகத்தன்மையை வலிந்து ஏற்படுத்துகிறது என்ற ஆதங்கத்திலும், என் வாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும்தான் அது ஒரு புனைவு என என் அறியாமையால் எழுதியிருந்தேன்.

    உலகப்புகழ் என்பதுவேறு, உலகத்தரம் என்பது வேறு. சன் தொ. கா கூட உலகத்தமிழரிடையே புகழ்பெற்றதுதான்; ஆயினும் அதன் பல நிகழ்ச்சிகளின் தரம் மக்கள் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளின் முன்னே ஒன்றுமில்லாதாகவேயிருக்கிறது. எனவே உலகப்புகழ் என்று கூறி தரத்தைப் பற்றி கேள்விகேட்கக்கூடாது என்பது தவறு. தனது கருத்துக்கணிப்பிற்கான அடிப்படையான தகவல்களைப் பொதுவில் வைக்காததினால் ஏ.சி. நீல்சன் நிறுவனமும் நம்பகத்தன்மையற்றதாகவே உள்ளது. மேலும் ஜெயாவிற்குப் பிறகு வை.கோ அதிமுக தலைமையை ஏற்கத் தகுதியானவரா என்ற option ஐயும் கேட்டதினால், சன் தொலைக்காட்சியின் உள்நோக்கம் வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. இது ஒரு மிகமோசமான trend. உலகம் முழுதும் ஊடகங்கள் எவ்வாறு பொதுப் புத்தியைக் கட்டமைக்கின்றன என்பது குறித்து சோம்ஸ்கி முதலான அறிஞர்கள் விமரிக்கின்றனர். ஆட்சியதிகாரமும் ஊடகச் செல்வாக்கும் ஏற்படுத்தும் மிகமோசமான விளைவுகளுக்கான அனைத்துவித சாத்தியக்கூறுகளையும் தற்போதைய தமிழ்க் குமுகாயம் கொண்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  16. ??மற்றபடி இப்பதிவைப் பற்றி சொல்லவேண்டுமானால் தினகரனின் அந்த குறிப்பிட்ட சர்வேயில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. கலைஞருக்கு பிறகு யார் என்று பல ஊடகங்களை கேள்விகளை எழுப்பி கட்டுரைகள் வரைவதை யாரும் ஆட்சேபித்ததாக தெரியவில்லை. ஜெ.வை பற்றி மட்டும் விமர்சனங்களோ, சர்வேயோ எடுக்கக் கூடாது என்பது வடிகட்டிய ஏகாதிபத்திய அணுகுமுறையாகவே படுகிறது. ஜெ. என்ன அந்த அளவுக்கு ஸ்பெஷலா???

    லக்கி, கருணாநிதி தனக்கு இதுதான் கடைசித்தேர்தல் என கடந்த 2001 லேயே சொல்லியிருந்தார். எனவே அவருக்குப் பின் யார் என்ற கேள்வி இயல்பானதுதான். ஆனால் ஜெயா அப்படி ஏதும் சொல்லாததுமல்லாமல், அவருக்கு அப்படியொன்றும் வயதாகிவிடவில்லையாதலால் அத்தகைய கேள்வியின் அவசியம் என்ன என்பதே எனது கேள்வி. மற்றபடி இதில் என்ன ஏகாதிபத்திய அணுகுமுறையைக் கண்டீர்கள், எனக்குப் புரியவில்லை. மேற்கொண்டு விபரம் வேண்டுமெனில் எனது பழைய இரு பதிவுகளில் ஜெயா பற்றிய விமரிசனங்களைப் படித்து விட்டு கருத்துக்கூறவும். (ஒன்று, இரண்டு)



    //நடுநிலை நாளேடு என்று தன்னை கூறிக்கொள்ளும் தினமலரின் ஒரு இதழையும், கட்சி சார்பு ஏடாக அறியப்படும் தினகரனின் ஒரு இதழையும் ஒன்றாக வைத்து ஒப்பிட்டுப் பார்த்தீர்களேயானால் ஓரளவுக்கு உங்களுக்கு நிலவரம் புரியலாம் :)//

    லக்கி, தினமலர் ஒரு கழிசடைப் பத்திரிக்கை என்றாலும், சன் தொ. கா யின் வீச்சோடு ஒப்பிடும்போது தினமலர் தயாரித்து வெளியிடும் செய்திகளின் வீச்சு எல்லாம் ஜு.ஜுபி என்பதால் அதுகுறித்து விமரிக்கவில்லை. இவ்விடுகையின் நோக்கம் பின்னூட்டத்தில் கிருஷ்னா குறிப்பிட்டுள்ளது தான்.

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா6 மே, 2007 அன்று PM 5:57

    லக்கி,
    இது பூமராங் மாதிரி திரும்பிடப் போவுது. உங்க தலைவர உசாரா இருக்கச் சொல்லுங்க.. ஏற்கனவே அம்மா "எனக்குப் பாதுகாப்பு போதவில்லை"ன்னு அறிக்கை விட்டுகினு இருக்காங்க.. இதுல ஜெயாவுக்குப் பிறகு யாருன்னு கருத்துக் கணிச்சா, இதையே சாக்கா எடுத்து
    "என்னை மொத்தமா அப்புறப்படுத்தத் திட்டம்"னு குண்டைத் தூக்கிப் போட்ரப் போறாங்க..

    பதிலளிநீக்கு
  18. // நடுநிலை நாளேடு என்று தன்னை கூறிக்கொள்ளும் தினமலரின் ஒரு இதழையும், கட்சி சார்பு ஏடாக அறியப்படும் தினகரனின் ஒரு இதழையும் ஒன்றாக வைத்து ஒப்பிட்டுப் பார்த்தீர்களேயானால் ஓரளவுக்கு உங்களுக்கு நிலவரம் புரியலாம் :) //

    ரெண்டையும் குப்பையில தள்ள வேண்ட்டியதுதான். தள்ளமுடியாமத்தான ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் அந்தந்த பத்திரிகைக்கு அடைமொழிகள் கிடைச்சிக்கிட்டிருக்கு. நல்லவன்னு சொல்லிக்கிட்டு திருடுறவன் பொய் சொன்னதால "திருடன்னு சொல்லிக்கிட்டே திருடுறவன்" நல்லவனாயிற முடியாது. அடுத்தவன் தப்பு செஞ்சப்ப எங்க போனன்னு கேட்டுக்கிட்டே தப்பு செய்றது எப்பவும் பாஷன். இப்ப மட்டும் என்ன? அரசியல்வாதிகள் மட்டும் வாழ்க. அடிக்க முடியுறப்ப அடி.

    பதிலளிநீக்கு
  19. உங்கள் கருத்தோடு ஒத்துப் போக முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  20. பின்னூட்டத்தில் இந்த விஷயத்தை இவ்வளவு சீரியஸாக விவாதித்து இருக்கும் அத்தனை பேரும் சர்வே வெளியாகி விட்ட நிலையில் அந்த சர்வேயில் கூறப்பட்டிருக்கும் தகவல் (நக்கல்) காமெடி பற்றிக் கூறவேயில்லையே.

    அதாவது ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவை தலைமை தாங்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ள வரிசையில் இரண்டாவது இடம் வைகோவுக்கு. அதாவது தனது கட்சிக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள சிரமப்பட்டுக் கொண்டிருக்கும், அதிமுகவைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிர்ப்பந்தத்தை ஜீரணிக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற வைகோவுக்கு.

    முதல் நபராக பன்னீர் செல்வத்தை இட்டிருப்பதற்கு காரணம், சட்டசபை துணைத் தலைவரான இவர் தான் அவைக்கு ரெகுலராக வருகிறார். அவரை அம்மாவிடம் போட்டுக் கொடுப்பதற்கு. இரண்டாவது இடமாக வைகோ, ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஜெயலலிதாவையும், அதிமுகவினரையும் எரிச்சலூட்டியது போல் ஆயிற்று. அத்துடன் வைகோவுக்கு எரிச்சலையும் மதிமுகவினருக்கு பீதியையும் கிளப்பியது போல் ஆயிற்று. செஞ்சி குழுவுக்கு சப்போர்ட்டாமாமாம். இராஜதந்திரமாமாம்.

    இந்த பக்கத்து இலைக்கு பாயசம் எதுக்காக என்றால், சில நாட்களில் திமுகவுக்கு அடுத்த வாரிசு ஸ்டாலின் தான் என்று மக்கள் ஒருமனதாகக் கூறியுள்ளதாக கருத்துக் கூறுவதற்கு. அடப் போங்கப்பா, திமுகவோட உட்கட்சி ஜனநாயகத்தில் இது என்ன புதுசா.

    ஆனால் ஒன்று ஜெயலலிதா சர்வேயினை முன்னேயே எடுத்து விட்டதன் காரணம், பேராசிரியர் அன்பழகனை கடந்த வாரத்தில் 'உதவிப் பேராசிரியர்' என்று அதிமுகவினர் நக்கல் பண்ணியது தான் என்று சிலர் சொல்கிறார்கள்.

    பின்னூட்டம் நீண்டதால் இதனை தனி இடுகையாக இங்கே போட்டிருக்கிறேன்.

    http://ennathannadakkum.blogspot.com/2007/05/blog-post.html

    பதிலளிநீக்கு
  21. திரைத்துறையும், சின்னத்திரையும் பொழுது போக்கு தொடர்புடைய ஊடகங்கள்...இவற்றில் அரசியலை நுழைப்பது கண்டிக்கத் தக்கது.

    சன் டிவி ஒருவியாபார நிறுவனம் அதன் ஒருபக்க நிலை கண்டிக்கத் தக்கது. காசைக் கொடுத்து இம்சையை மட்டும் பார்பானேன்...என்று தற்போது விஜய் டிவிக்கு சைன் அப் பண்ணி வச்சிருக்கேன்.
    :)

    பதிலளிநீக்கு
  22. இனி சன் குழுமத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மை தங்கவேலு. அது ஒரு மோனோபோலி நிறுவனமாக வளர்ந்துவிட்டது, இனி சன் குழுமம் சொல்வது தான் உண்மை, மற்ற எல்லாம் பொய் என்ற நிலை வர வெகு நாட்கள் இல்லை. அரசு அதை தடுக்கமுடியாத நிலையில் உள்ளது, தி.மு.க ஆதரவு இல்லாமல் மத்தியில் அரசு நடக்காது என்ற நிலையில் உள்ளதால்...

    தி.மு.கவின் அடுத்த தலைவர்கள் வரிசையில் எப்படி இ.வி.கே.எஸ்.இலங்கோவன், சிதம்பரம் பேர் இருக்குமோ???!! கொஞ்சம் பொருத்து இருந்து பார்ப்போம்! :)))))))))))))))

    பதிலளிநீக்கு
  23. இன்னா வாத்தி, இத்த கூட உன்னால கரிட்டாக ரோசிக்க முடிலெ......யாரு வைகோ ...அண்ணத்தை தான்பா வாரிசு.

    பதிலளிநீக்கு
  24. ஜெயலலிதாவின் உத்தரவுகளை அதிமுகவின் அடுத்தக்கட்டத் தலைவர்களே நிறைவேற்ற கொஞ்சம் யோசிக்கும் தருவாயில், கெடா வெட்டும் கேப்பில் உள்ளே புகுந்து அம்மாவின் ஆணைகளை சிரமேற்கொண்டு ஏற்று பட்டையைக் கிளப்பும் வைகோவின் பெயரை அடுத்த வாரிசாக அறிவித்ததில் என்ன தவறு?

    பதிலளிநீக்கு
  25. //ஆகவே சன் டீவீ நடுநிலையாக மாறினால் மட்டுமே அடுத்த சமுதாயம் சரியான செய்திகளை அறிய முடியும். சன் டீவீயின் வீச்சு மிகவும் அதிகம்//

    நன்றி கிருஷ்ணா, நான் சொல்லவந்த பொருளை சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  26. பின்னூட்டத்திற்கு நன்றி பாபா. ஆயினும் உங்கள் கருத்துக்களில் // தினகரன் அல்லது தேர்தல் சமய ஆருடங்களை மக்கள் பொழுதுபோக்காகவே எடுத்துக் கொள்கின்றனர். // எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. கிருஷ்ணா சொன்னமாதிரி அடுத்தத் தலைமுறையை சன் தொ. கா. ஆட்டுவிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன. எனவே இது மிகவும் பொருட்படுத்தக்கூடிய விதயம். முன்பு எம்.கே. குமார், அவருடைய பதிவில் உங்களுக்குச் சொன்னதையே நானும் சொல்வது ஒரு தற்செயல் நிகழ்வு.

    பதிலளிநீக்கு
  27. // இந்த நிறுவனத்தின் நிரலியில் வேலை செய்துள்ளதால் தெரியும். அமெரிக்காவில்
    எந்த சாக்லேட் எந்த மாநிலத்தில் எந்த கடையில் அதிகமாக விற்றது
    என்று இவர்களை கேட்டால் கரெக்ட்டாக சொல்வார்கள்.
    இது உலகப் புகழ் பெற்ற நிறுவனம்தான். கருத்துகணிப்பு உண்மையாக தான் செய்வார்கள். //
    கருத்திற்கு நன்றி ஆதிரை. ஆனால், நிரலியில் வேலைசெய்துள்ளதை வைத்து ஏ.சி. நீல்சன் தனது களப்பணியை (survey) உண்மையாகச் செய்வார்கள் என்பதை நீங்கள் எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்?

    //---எந்த சாக்லேட் எந்த மாநிலத்தில் எந்த கடையில் அதிகமாக விற்றது
    என்று இவர்களை கேட்டால் கரெக்ட்டாக ---

    Absolutely... Because this is quantitative and depends on the production/operations software synchronization with the partners.

    But the current survey is 'qualitative'. There are no simple 'three choice' paths.//

    பாபா, இதுவும் ஒரு quantitative study தானே. எங்களது Qualitative study என்பது பலதரப்பட்ட மக்களை ஒரீடத்தில் கூடச்செய்து அவர்களை ஒரு பொருள் பற்றிப் பேசச் செய்து (Focus group discussion) அதன்வழி ஒரு முடிவுக்கு வருவது. இதுபோல் மேலும் சில வழிமுறைகளும் உள்ளன. ஆனால் இங்கு சன்னிற்காக ஏ.சி .நீல்சன் செய்துள்ளது ஒரு கேள்வித்தாளின்மூலம் மக்கள் கருத்துக்களை quantitative ஆக assess செய்துள்ளதாகும். என் புரிதலில் quantitative என்பது புறவயமானது (objective), qualitative (subjective) என்பது அகவயமானதாகும். அதாவது quantitative எனபது மறுபடி அதே ஆராய்ச்சியை, யார் செய்தாலும் கிட்டத்தட்ட அதே முடிவுகளைத் தரவேண்டும். ஆனால், qualitative அப்படியல்ல.

    பதிலளிநீக்கு
  28. புளியமரம் தங்கவேல்.
    அருமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    உங்கள் விமர்சனத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடே.

    சர்வேக்களை நம் விருப்பப்படி வளைக்க இயலும் என்பதில் ஐயமில்லை. இதனால் சர்வேக்களே கூடாதென்பதில்லை மாறாக முழு விபரமும் தரப்படவேண்டும். சாம்பிளைப் பற்றிய விபரமில்லாமல் வெறும் முடிவுகளை அலசுவதில் ஆபத்து நிறைய உண்டு.

    பொய்கள், அதிலும் பொய்கள் அப்புறமாத்தான் புள்ளிவிபரங்கள் என பி.காம் பாடப் புத்தகத்திலேயே சொல்லப்பட்டிருந்தது நியாபகம் வருகிறது.

    லொயோலா டைம்ஸ் எடிட்டராக இருந்தபோது வருடத்தின் கடைசி இதழுக்காக ஒரு சர்வே நடத்தினேன். லொயோலாவில் அதிகம் பாப்புலரான மாணவன் யார் என. சர்வேக்கான கேள்விகள் அடங்கிய படிவத்தை அதிகமாக எங்கள் டிப்பார்ட்மெண்ட்டிலேயே வினியோகித்தேன்.

    கடைசியில் எங்கள் டிப்பார்ட்மெந்த் பையந்தான் முதல் மாணவனாக வந்தான்.

    'சர்வே'சுரனுக்கே வெளிச்சம்.

    பதிலளிநீக்கு
  29. இந்தப் பதிவின் தலைப்பிலான கருத்துக் கணிப்பு இன்றைய தினகரன் நாளிதழில் வந்திருக்கிறது. ஏசி நீல்சனின் கருத்துக் கணிப்பு அதிகாரிகளும் நம் புளியமரம் வலைப்பூவை படித்திருப்பார்கள் போலிருக்கிறது.

    குறிப்பு : சர்வேயில் நல்லவேளையாக தயாநிதிமாறன் பெயர் இல்லை :-)

    பதிலளிநீக்கு
  30. வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிச்சடலாமா?

    பதிலளிநீக்கு
  31. பெயரில்லா9 மே, 2007 அன்று PM 6:08

    // நிரலியில் வேலைசெய்துள்ளதை வைத்து ஏ.சி. நீல்சன் தனது களப்பணியை (survey) உண்மையாகச் செய்வார்கள் என்பதை நீங்கள் எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்?
    //
    உலகப் புகழ் பெற்ற நிறுவனம் தன் பெயரை
    கெடுத்துக்கொள்ள விரும்பாது என்பதை வைத்துதான்.

    அப்புறம் இன்னொரு விஷயம் டிவி சானல்களில்
    எந்த நிகழ்ச்சியை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்று
    தகவல் சேகரிப்பவர்களும் இவர்கள்தான்.
    - aathirai

    பதிலளிநீக்கு
  32. பெயரில்லா9 மே, 2007 அன்று PM 6:37

    லக்கிலுக்....

    Azhagiri irukeppa...

    4 killed and still riots going on...

    பதிலளிநீக்கு